News April 15, 2025

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை: TN அரசு

image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2016–21ல் பால் வளத்துறை அமைச்சராக இருந்த <<16105372>>ராஜேந்திர பாலாஜி<<>>, ₹3 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Similar News

News January 20, 2026

2047-குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: SBI

image

இந்தியா பொருளாதார ரீதியாக ஜெட் வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்திய SBI அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் ‘உயர் நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இது சேரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த நாடாக’ இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

ஜனவரி 20: வரலாற்றில் இன்று

image

*1841 – ஹாங்காங் தீவு பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது. *1859 – தமிழறிஞர், மொழி ஆய்வாளர் சவரிராயர் பிறந்த தினம். *1990 – அசர்பைஜான் விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. *1964 – இந்திய விமானப்படை MiG-21 போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்தது. *2009 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

News January 20, 2026

நிதிஷ் தான் சரியான மாற்று வீரர்: இர்பான் பதான்

image

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ODI-ல் நிதிஷ் குமார் ரெட்டி அரைசதம் அடித்து அசத்தினார். இதுகுறித்து பேசிய இர்பான் பதான், ஹர்திக் பாண்டியாவுக்கு நிதிஷ் சரியான மாற்று வீரர் என்று கூறினார். 135 கிமீ வேகத்தில் பந்து வீசவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் அவருக்கு திறன் உள்ளது. அவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

error: Content is protected !!