News August 6, 2024

மாறிய காட்சிகள்.. தப்பியோடிய வங்கதேச அமைச்சர் கைது

image

வங்கதேச கலவரத்தால் அந்நாடே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். ஹசீனா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஐடி அமைச்சராக இருந்த ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிப்பதற்காக டாக்கா விமான நிலையத்துக்கு மாறுவேடத்தில் இன்று வந்தார். அவரை அடையாளம் கண்ட ராணுவத்தினர் ஜுனைத் அகமதை கைது செய்தனர்.

Similar News

News October 17, 2025

குஜராத் அமைச்சரவை மாற்றம்.. புதிய பட்டியல் வெளியானது

image

CM பூபேந்திர படேலை தவிர குஜராத் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், விரிவாக்கப்பட்ட அமைச்சரவை பட்டியலுடன், அம்மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை CM சந்தித்தார். இந்நிலையில், 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ருஷிகேஷ் படேல் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

News October 17, 2025

போனஸ் பிறந்த கதை தெரியுமா?

image

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டதே போனஸ் முறை. ஆங்கிலேயர் மாத சம்பள முறையை கொண்டு வந்தபோது, 4 வாரங்களுக்கு ஒரு முறை என 12 முறை சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் வருடத்திற்கு 52 வாரங்கள் என்றால், 13 முறை சம்பளம் வழங்க வேண்டுமல்லவா? இதை வைத்து மகாராஷ்டிராவில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் முதல் முதலாக 1940, ஜூன் 30-ம் தேதி இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.

News October 17, 2025

தீபாவளி வாழ்த்து கூறினார் உதயநிதி

image

திமுகவினருக்கு, உதயநிதி தீபாவளி பரிசுப் பொருள்களை வழங்கினார். அப்போது சிலர் தன்னிடம் தீபாவளி வாழ்த்து கூற தயங்கியதாக நிகழ்ச்சியில் தெரிவித்தார். மேலும், ‘நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்’ என்றும் கூறினார். தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், உதயநிதி இவ்வாறு பேசியுள்ளார்.

error: Content is protected !!