News October 21, 2025
ALERT: உடனே உங்க PIN நம்பரை மாத்துங்க

ATM PIN நம்பரை மறக்கக்கூடாது என்பதற்காக 1234, 1111, 2222, 3333, 0000, 5555, 4321, பிறந்த ஆண்டு, என்ற வரிசையில் PIN நம்பர் வைக்குறீங்களா? இப்படி நீங்கள் ஈஸியான பின் நம்பரை வைத்தால், ஹேக்கர்கள் அதனை கண்டுபிடித்துவிடுவதாக தரவுகள் கூறுகிறது. எனவே உங்கள் பணம் திருடுபோகாமல் இருக்க உடனே இதை மாற்றும்படி வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன. யாரும் மோசடியில் சிக்காமல் இருக்க இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 21, 2025
BIG NEWS: கனமழை.. CM ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைத்து குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்தாலும் நெல் கொள்முதல் பணிகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
ரயில்வே வேலை, 5810 காலி பணியிடங்கள்; APPLY

ரயில்வேயில் Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist, Traffic Assistant ஆகிய பதவிகளுக்கு 5810 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு, ₹25,500 – ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதோ ஒரு டிகிரியை முடித்திருந்தாலே போதும். 33 வயதுக்குட்பட்டவர்கள் நவ.20-க்குள் <
News October 21, 2025
நாட்டிலேயே தமிழகத்தில் அதிக MBBS இடங்கள்

இந்தியாவில் MBBS இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 73,300 இடங்களும், தனியாரில் 64,300 இடங்களும் உள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 11,825 மருத்துவ இடங்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா – 11,695, உ.பி., – 11,250 என இருக்கின்றன. இந்த மருத்துவ இடங்களின் அதிகரிப்பால், 1,000 பேருக்கு 1 டாக்டர் என்ற WHO பரிந்துரைத்த நிலையை வேகமாக அடைய உதவும் என நம்பப்படுகிறது.