News April 8, 2025
தமிழ்நாடு கவர்னர் மாற்றம்?

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது உள்பட பல விவகாரங்களில் திமுக அரசுக்கு R.N.ரவி பெரும் தலைவலியாக இருந்தார். ஆனால், அரசு தொடர்ந்த வழக்கில், கவர்னருக்கு எதிராக தீர்ப்பளித்து சுப்ரீம் கோர்ட் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
News November 23, 2025
டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு WFH கொடுக்க அறிவுறுத்தல்

டெல்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் குப்பைகள் எரிக்க கூடாது என தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 23, 2025
நிதியமைச்சரின் பெயரில் ₹1.47 கோடி மோசடி

SM-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ₹1.47 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ₹21,000 முதலீடு செய்தால் ₹60,000 லாபம் கிடைக்கும் என்று போலி பங்குச் சந்தை திட்டங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கியுள்ளனர். இதை நம்பி மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அவர்களிடம் இழந்துள்ளார். ஆசைவார்த்தையை நம்பி ஏமாறாதீங்க மக்களே!


