News August 20, 2024
CM-ன் தனி செயலாளர்கள் மாற்றம்

CM ஸ்டாலினின் தனி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வரின் 1வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 2வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, தனி செயலாளராக இருந்த முருகானந்தம், தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Similar News
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு!

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. TN-ல் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க சென்னை HC சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.