News February 13, 2025

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்?

image

திமுகவில் விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், மந்தமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை பலப்படுத்தவே இந்த மாற்றம் எனவும் தெரிகிறது. திமுகவில் தற்போது 72 மா.செக்கள் உள்ளனர்.

Similar News

News February 13, 2025

யாரை கண்டும் எங்களுக்கு பயம் இல்லை: சாண்டோ

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என வங்கதேச கேப்டன் சாண்டோ கூறியுள்ளார். வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரருமே தனியாக கோப்பையை வென்று கொடுக்கும் திறமையுடையவர்கள் என்றும், இந்த படை பெரிய அணியையும் வீழ்த்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 13, 2025

இந்தியாவின் டாப் 6 கோடீஸ்வர குடும்பங்கள்!

image

ஆசியாவிலேயே டாப் 6 இந்திய கோடீஸ்வர குடும்பங்களை ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 1) முகேஷ் அம்பானி குடும்பம் (சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி), 2) மிஸ்ட்ரி குடும்பம் (ரூ.3.25 லட்சம் கோடி), 3) ஜிண்டால் குடும்பம் (ரூ.2.44 லட்சம் கோடி), 4) பிர்லா குடும்பம் (ரூ.1.99 லட்சம் கோடி), 5) பஜாஜ் குடும்பம் (ரூ.1.74 லட்சம் கோடி), 6) இந்துஜா குடும்பம் (ரூ.1.32 லட்சம் கோடி).

News February 13, 2025

BREAKING: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி

image

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5 நாள்களான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜகவால் இதுவரை முடிவெடுக்க முடியவில்லை. இந்நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சக அறிவிப்பு தெரிவிக்கிறது.

error: Content is protected !!