News October 26, 2025
வேற மாறி.. வேற மாறி.. Global Star-ஐ இயக்கும் நெல்சன்

ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகிவிட்ட நெல்சன், ஜெயிலர் 2-வில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர், ரஜினி- கமல் படத்தை இயக்குவார் எனக் கூறப்படும் நிலையில், மற்றொரு செய்தியும் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. நடிகர் ராம் சரணுடன் நெல்சன் இணையவுள்ளார் என்றும், இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் தங்கம் விலை புதிய உச்சம்

பொங்கல் பண்டிகையான இன்று(ஜன.15) தங்கம் சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹13,290-க்கும், சவரன் ₹1,06,320-க்கும் விற்பனையாகிறது.
News January 15, 2026
விவசாயிகள் சந்தோசமா இருக்கணும்.. ரஜினி வாழ்த்து!

தனது வீட்டு வாசலில் காலை முதல் காத்திருந்த ரசிகர்களை நோக்கி, புன்னகையுடன் கையசைத்த அவர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார். மேலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பனியையும் பொருட்படுத்தாமல் காலை முதலே காத்திருந்த ரசிகர்கள் அவரை பார்த்தும் ‘தலைவா.. தலைவா’ என கத்தி கூச்சலிட்டனர்.
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.


