News August 8, 2024

வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பில் மாற்றம்?

image

வினேஷ் போகத் இன்று அதிகாலை ஓய்வை அறிவித்த நிலையில், கோபத்தின் வெளிப்பாடுதான் ஓய்வு அறிவிப்பு என அவரது சிறுவயது பயிற்சியாளரும், உறவினருமான மகாவீர் போகத் தெரிவித்துள்ளார். வினேஷை நேரில் சந்தித்து ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்துவதாகக் கூறிய அவர். வினேஷும், சாக்‌ஷியும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 17, 2025

தஞ்சை அருகே போலி மருத்துவர் கைது

image

தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மகாலிங்கம் (67) என்பவரை சுகாதாரப் பணி இணை இயக்குனர் (பொ) அருள்செல்வனின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் கைது செய்தனர். பி.காம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏராளமான மருந்து, மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

News November 17, 2025

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

சேலத்தில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

image

சேலம் மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!