News February 13, 2025

BREAKING: தமிழக அமைச்சரவையில் மாற்றம்

image

TN அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் பொன்முடி இனி கவனிப்பார். CM ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2025

வார இறுதி விடுமுறை.. 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 627 சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

News February 13, 2025

யாரை கண்டும் எங்களுக்கு பயம் இல்லை: சாண்டோ

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என வங்கதேச கேப்டன் சாண்டோ கூறியுள்ளார். வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரருமே தனியாக கோப்பையை வென்று கொடுக்கும் திறமையுடையவர்கள் என்றும், இந்த படை பெரிய அணியையும் வீழ்த்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 13, 2025

இந்தியாவின் டாப் 6 கோடீஸ்வர குடும்பங்கள்!

image

ஆசியாவிலேயே டாப் 6 இந்திய கோடீஸ்வர குடும்பங்களை ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 1) முகேஷ் அம்பானி குடும்பம் (சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி), 2) மிஸ்ட்ரி குடும்பம் (ரூ.3.25 லட்சம் கோடி), 3) ஜிண்டால் குடும்பம் (ரூ.2.44 லட்சம் கோடி), 4) பிர்லா குடும்பம் (ரூ.1.99 லட்சம் கோடி), 5) பஜாஜ் குடும்பம் (ரூ.1.74 லட்சம் கோடி), 6) இந்துஜா குடும்பம் (ரூ.1.32 லட்சம் கோடி).

error: Content is protected !!