News August 7, 2024
இந்திய அணியில் மாற்றம்?

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவம் துபே நீக்கப்பட்டு, ரியான் பராக் இடம்பெறுவார் எனவும், ஜெய்ஸ்வால் களமிறங்குவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. பும்ரா, ஷமி இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. 27 ஆண்டுகளாக SL-க்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோற்றதே இல்லை என்ற சாதனையை இழக்காமல் இருக்க மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 18, 2025
19 பேர் பலி: கேரளாவில் அமீபா அரசியல்

கேரளாவில் <<17718285>>மூளையை உண்ணும் அமீபாவால்<<>> பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளும் அரசு புள்ளிவிவரங்களை மறைப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கடந்த 2016-ல் முதல் பாதிப்பு ஏற்பட்டபோது முதல் ஆட்சியில் இருக்கும் இந்த CPM அரசு, இது தொடர்பான முறையான நடவடிக்கை எடுக்காததால், கடந்த 15 நாள்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சாடியுள்ளன.
News September 18, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். *ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். *ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். *லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
News September 18, 2025
GST 2.0: டிவிக்களின் விலை ₹70,000 வரை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக <<17745738>>கார், பைக் நிறுவனங்கள் <<>>வாகனங்களின் விலையை குறைத்த நிலையில், சோனி நிறுவனமும் பிரீமியம் டிவிக்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 85 இன்ச் டிவிக்களின் விலை ₹70,000, 75 இன்ச் டிவி – ₹51,000, 65 இன்ச் டிவி 40,000, 55 இன்ச் டிவி – ₹32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.