News August 22, 2025

Specified Employee வருமான வரி விலக்கில் மாற்றம்

image

Specified Employee-ன் வருமான வரம்பு ₹50,000-லிருந்து ₹4 லட்சமாக உயர்த்தி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வகை ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கும் வட்டியில்லா கடன், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கு இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கை பெறுவதற்கான வருமானம் ₹2 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

அனிருத்துக்கு அதிர்ச்சி.. ஐகோர்ட்டில் வழக்கு

image

சென்னை கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு, தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசிக செய்யூர் MLA பனையூர் பாபு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள மனுவில், கலெக்டரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை ஐகோர்ட் நடைபெறவுள்ளது.

News August 22, 2025

பொது அறிவு வினா- விடை

image

கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 22, 2025

இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

image

<<17480599>>தங்கம் விலை இன்று(ஆக.22)<<>> சரிந்த போதிலும், வெள்ளி விலை விண்ணை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹1,28,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!