News August 3, 2024
தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரையில் தண்டவாள பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால், தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் ஆக.5ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-ராமநாதபுரம் ரயில் 5, 6,8,9,11 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை – குருவாயூர் ரயில் 4,5,8,10 தேதிகளில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் 8ம் தேதி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
ஷேக் ஹசீனா மீதான 5 குற்றச்சாட்டுகள்

ஷேக் ஹசீனா மீதான பின்வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, அந்நாட்டு <<18310332>>தீர்ப்பாயம் அறிவித்துள்ளது<<>>. அந்த குற்றச்சாட்டுகள்: *பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்த, ஒடுக்கிய பாதுகாப்பு படையினர் & அவாமி லீக் கட்சியினரை தடுக்க தவறியது *போராடிய மாணவர்களை தாக்க ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்த ஆணையிட்டது *மாணவர் பேகம் ரோக்கியா கொலை, 11 போராட்டக்காரர்கள் கொலையில் ஆதரவாக செயல்பட்டது ஆகியவை.
News November 17, 2025
இதற்கு சாத்தியமா? நீங்களே சொல்லுங்க!

கான்பூரை சேர்ந்த இரட்டையர்களுக்கு கைரேகை, ரெட்டினா (கண் விழி) ஆகியவை ஒரே மாதிரி உள்ளதாம். இதனால் ஆதார் பயோமெட்ரிக்கில் ஒருவருடைய கைரேகை பதிவானதும், மற்றொருவரின் தரவுகள் deactivate ஆகிவிடுகிறதாம். இரட்டையர்களுக்கு கைரேகை, ரெட்டினா ஆகியவை 55-74% வரையே ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளதாக அறிவியல் கூறுகிறது. எனவே, இது டெக்னிக்கல் மிஸ்டேக் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News November 17, 2025
சற்றுமுன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவை கலைப்பு தீர்மானத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். நாளை நடைபெறவிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் MLA-க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகிறார். அதன்பின் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் நவ.20-ம் தேதி முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுகிறது.


