News August 26, 2024
பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றம்?

மாணவர்களின் செயல்திறனை பிரதிபலிக்கும் வகையில், 12ஆம் வகுப்பு மார்க்ஷீட்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களை சேர்க்க PARAKH பரிந்துரை அளித்துள்ளது. அதாவது 9th மதிப்பெண்களுக்கு 15%, 10th மதிப்பெண்களுக்கு 20%, 11th மதிப்பெண்களுக்கு 25%, 12th மதிப்பெண்களுக்கு 40% வெயிட்டேஜ் அளித்து Overall மார்க்ஷீட் தரப்படும். இந்த நடைமுறையை ஆதரிக்கிறீர்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News November 14, 2025
வடசென்னைக்கு பிறகு என் நிலை இதுதான்: ஆண்ட்ரியா

‘வடசென்னை’ பட சந்திரா கேரக்டருக்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் தனக்கு வரவில்லை என்று ஆண்ட்ரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஏனென்றால், தன்னை வைத்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை என்ற அவர், உண்மையில் பல நடிகர்கள், தங்கள் படங்களில் பவர்ஃபுல் பெண் கேரக்டர்களை விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார். ஆண்ட்ரியாவின் கேரக்டர்களில் உங்களை கவர்ந்தது எது?
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவு.. ஆரம்பத்திலேயே திடீர் திருப்பம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆர்ஜேடி – காங்., கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. ஜேடியூ – பாஜக கூட்டணி 38, ஆர்ஜேடி – காங்., 42, ஜன் சுராஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறலாம்.
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.


