News December 11, 2024
CUTE தேர்வு முறையில் மாற்றம்

CUTE தேர்வு நடைமுறையை மாற்றியுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு முதல் 12ஆம் வகுப்பில் எந்த பாடத்தில் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம். இந்த தேர்வுக்கான பாடங்கள் 63இல் இருந்து 37 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் முறை தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், இனி கணினி வழியில் மட்டுமே க்யூட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா தங்கம் வென்றார்.
◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
◆அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.
News August 27, 2025
கட்சி தொடங்கிய பின், முதல்முறையாக விஜய்

‘விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்’ என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக கட்சியை துவங்கிய அவர், அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது சர்ச்சையானது. கடந்த ஆண்டு வாழ்த்து கூறாத விஜய், இந்த ஆண்டு கூறியுள்ளதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
News August 27, 2025
RECIPE: வயிற்று கொழுப்பை குறைக்கும் எள்ளு துவையல்!

◆கொலஸ்ட்ரால் & உடல் கொழுப்பு குறைய எள்ளு துவையல் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
➥எள்ளை, வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும்.
➥அவற்றை மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த தேங்காய், உப்பு & புளி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
➥தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால், எள்ளு துவையல் ரெடி! SHARE IT.