News June 5, 2024
நான்காவது முறையாக முதல்வராகிறார் சந்திரபாபு

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்கிறது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான YSR காங்., வெறும் 10 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
Similar News
News March 3, 2026
மார்ச் 3: வரலாற்றில் இன்று

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்
News March 3, 2026
கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.


