News March 26, 2024

“அதிமுக கூட்டணிக்கு வெற்றி”

image

மத்திய, மாநில அரசுகளின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடுங்கோபத்தில் உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், “மக்களின் மனநிலை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக திமுக மற்றும் பாஜக அரசுகள் பணியாற்றவில்லை” என்றார்.

Similar News

News October 26, 2025

மாரியின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

image

‘பைசன்’ படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரிசெல்வராஜ் தனது படங்களில் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை என்றும், இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருப்பதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News October 26, 2025

சளி, தொண்டை வலியா? உடனடி தீர்வு

image

மழைகாலம் வந்தால் சளியும் இருமலும் நாம் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி மீளலாம். முதலில் வெதுவெதுப்பான நீரில் துளசியை போட்டு வாய் கொப்பளித்து, சிறிய துண்டு இஞ்சியில் உப்பு தடவி சில நிமிடங்களுக்கு நன்கு மென்று சாற்றை விழுங்குங்கள் போதும். அவ்வளவு தான் நல்ல பலன் கிடைக்கும், வந்த வலி பஞ்சாக பறக்கும்.

News October 26, 2025

திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு: சீமான்

image

சென்னையில் பேனா மை கொட்டியதற்காக 5-ம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுக வட்டச்செயலாளரின் தலையிட்டால் போலீஸ் தலையிடவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இது திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!