News June 19, 2024
22, 23ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22, 23ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 22ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும், 23ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News March 26, 2026
மீண்டும் தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதா

வரும் தேர்தலில் பாஜக போட்டியிடவுள்ள 27 தொகுதிகளுக்கான <<19473425>>வேட்பாளர்களின் <<>>உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகர்கோவில் – பொன்.ராதாகிருஷ்ணன், தளி -அமர்பிரசாத் ரெட்டி, மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார், திருப்பூர் தெற்கு – ஏ.பி.முருகானந்தம், தி.மலை – அஸ்வத்தாமன், தஞ்சை – கருப்பு முருகானந்தம், வாசுதேவநல்லூர் – ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
மாதம் ₹11,000 கிடைக்கும்… சிறப்பு திட்டம்

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), மாதாமாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் உள்ள Post Office-ஐ அணுகுங்கள். SHARE.
News March 26, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்

விழுப்புரம் தெற்கு நகரக் கழகச் செயலாளர் <<19462475>>ஆர்.பசுபதி <<>>அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சி பொறுப்பு வழங்குகிறார் என அவர் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பசுபதி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


