News October 21, 2025

7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(அக்.21) மிக கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது.

Similar News

News October 21, 2025

மனைவியை பிரிந்தாரா சேவாக்?

image

EX கிரிக்கெட் வீரர் சேவாக், அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்த சூழலில், தீபாவளியை முன்னிட்டு அவர் தனது குழந்தைகள், தாயாருடன் எடுத்த போட்டோக்களை SM-ல் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஆர்த்தி வெளியிட்ட பதிவில் சேவாக் இடம்பெறவில்லை. இதையடுத்து விவாகரத்து தகவல் உண்மைதான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அவர் கடைசியாக 2023-ல் மனைவியுடன் புகைப்படம் வெளியிட்டார்.

News October 21, 2025

ரோடு ட்ரிப் போலாமா? பட்ஜெட் பைக்குகள் இதோ

image

ரோடு ட்ரிப் செல்ல ஆசை இருந்தும், அதற்கு ஏற்ற பைக் இல்லையா? இனி கவலை வேண்டாம். உங்களுக்காகவே, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் பைக்குகள் ஷோரூமுக்கு வந்துள்ளன. இந்த வகை பைக்குகள் ₹2.5 லட்சத்துக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன. அவை என்னென்ன பைக்குகள் என்பதை மேலே swipe செய்து பாருங்கள். உங்களின் ஃபேவரைட் பைக்கின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 21, 2025

எச்சரிக்கை: மழைக் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க

image

மழைக் காலத்தில் இவற்றை தவிர்க்க வேண்டுமென்று மின்வாரியம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. *ஈரக் கைகளால் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்கக் கூடாது. *வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகளை இயக்க வேண்டாம். *மின்கம்பங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்ல வேண்டாம். *மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ, துணிகளை உலர்த்துவதோ கூடாது. *மின்தடை புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!