News April 12, 2025
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாகை, அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் செல்லுங்கள்..
Similar News
News November 28, 2025
ஈரோட்டில் கோடிக்கணக்கில் மோசடி: அதிரடி கைது

ஈரோடு சத்தி ரோடு பகுதியில், முகிம் கிளாஸ் ஹவுஸ் பெயரில் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருபவர் முகிம் கான். இவரிடம் சூப்பர்வைசராக பணியாற்றிய ஆதில் கான், அவரது முதலாளி முகில் கான் வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளார். தன்னுடைய வங்கிக்கு அவரது முதலாளியின் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடியாக மாற்றி தலைமறைவானார். இது தொடர்பான புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில் கானை கைது செய்தனர்.
News November 28, 2025
கேட்ட வரத்தை தரும் நட்சத்திர தீப வழிபாடு!

திருவோண நட்சத்திரத்திற்கு முன் 24 நிமிடங்கள் மட்டுமே வரும் அபிஜித் நட்சத்திரத்திடம் முழு மனதோடு வேண்டினால், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அகல் விளக்கில் 1 ஸ்பூன் பச்சை பயிரை சேர்த்து, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கிருஷ்ணரின் படத்திற்கு முன் இந்த தீபத்தை ஏற்றி வைத்து, முழு மனதோடு ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
விஜய் அப்போ பிறக்கவே இல்லை.. படிச்சி பாருங்க பாஸ்

1972-ல் செங்கோட்டையன் அதிமுகவில் இணைந்தபோது, விஜய் பிறக்கவேயில்லை. ஆம், விஜய் பிறந்தது 1974-ல் தான். 1977-ல் முதல்முறையாக KAS, MLA ஆன போது, விஜய்க்கு வயது 3. 1989-ல் ஜெ., ஜானகி அணிகள் என அதிமுக பிரிந்தபோது, விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தார். 1991 – 1996 காலகட்டத்தில் KAS முதல்முறையாக அமைச்சரான போதுதான், விஜய் ஹீரோவாக (நாளைய தீர்ப்பு – 1992) எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


