News May 17, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோட் எடுத்து செல்வது நல்லது.

Similar News

News March 24, 2026

வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

image

சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE.

News March 24, 2026

தேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ

image

தன்னுடைய சின்னத்திலேயே மதிமுக களமிறங்கவுள்ள தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக <<19452850>>செய்திகள்<<>> வந்தது. இந்நிலையில் ’சட்டப்பேரவையில் உங்கள் குரல் ஒலிக்க வாய்ப்புள்ளதா?’ வைகோவிடமே செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஒலிக்காது’ என ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளித்துள்ளார். இதனால், வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகள் சற்று அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

News March 24, 2026

காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

image

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது ➤அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் ➤ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் ➤கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.

error: Content is protected !!