News April 18, 2025
5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Similar News
News August 5, 2025
ராமதாஸ் செல்போன் ஹக்… அன்புமணி மீது புகார்

ராமதாஸின் செல்போன் வைபை மூலம் ஹக் செய்யப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அன்புமணியின் ஆதரவாளர் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்புமணியின் நிதி மேலாளர் சசிகுமார் மூலம்தான் வைஃபை மோடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே அன்புமணி ஒட்டுக்கேட்பு கருவியை தனது நாற்காலியில் வைத்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 5, 2025
முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கொள்முதல் நிலையமான ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் கிலோ ₹70-க்கு விற்கப்பட்ட முருங்கை விலை இன்று வெறும் ₹8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், போட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை எனப் புலம்புகின்றனர்.
News August 5, 2025
சற்றுமுன்: மூன்று பெண் குழந்தைகள் கொடூர கொலை

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி & மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.