News April 29, 2025
7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News April 29, 2025
பாக். பேரழிவை சந்திக்கும்.. தீர்க்கதரிசி கணிப்பு

பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவரது கணிப்புகள் 85% துல்லியமாக பலித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா-பாக். இடையே பதற்றம் நிலவும் நிலையில், 2025-ல் பாக். பேரழிவை சந்திக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இதனால் நிச்சயம் இந்தியா-பாக். போர் மூளும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதெல்லாம் சும்மா என இன்னொரு தரப்பினர் மறுக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 29, 2025
BSF வீரரை மீட்பது எப்போது? காங். கேள்வி

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை(BSF) வீரரை மீட்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என காங். கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்.23-ல் ஃபெரோஸ்பூர் அருகே எல்லை தாண்டியதாக கூறி, பூர்ணம் சாஹு என்ற BSF வீரர் பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பஹல்காம் தாக்குதலால் சாஹுவை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
News April 29, 2025
சூர்யா ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்

‘ரெட்ரோ’, = RJ பாலாஜி படம் என அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வர உள்ளன. ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதோ வாடிவாசலுக்குதான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். நீங்களும் ‘வாடிவாசல்’ படத்துக்கு வெயிட் பண்றீங்களா?