News September 26, 2024

இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. 30 மற்றும் 1ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

Similar News

News August 12, 2025

திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக். <<>>உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 12, 2025

திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்

image

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக அரசு இயற்றாதது ஏன் சிபிஎம் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது புரியாத புதிராக இருப்பதாக கூறிய அவர், இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து EPS பேசாதது ஏன் என்று கேட்ட அவர், சொந்த முகவரியை இழந்து நிற்கிற கட்சி என்றால் அது அதிமுகதான் என விமர்சித்தார்.

News August 12, 2025

தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு

image

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

error: Content is protected !!