News December 31, 2024
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும். எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட பைக்கில் வேகமாக செல்வதை தவிர்க்கவும்.
Similar News
News November 7, 2025
ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி: கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜன.7-ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும், அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.
News November 7, 2025
பிரபல பாடகி சுலக்ஷனா மாரடைப்பால் உயிரிழப்பு

பழம்பெரும் பாடகி சுலக்ஷனா பண்டிட் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரில் 1954-ல் பிறந்த இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடியது மட்டுமில்லாமல், 25-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1967-ல் தக்தீர் படத்திற்காக லதா மங்கேஷ்கருடன் இணைந்து சுலக்ஷனா பாடிய பாடல் மிகப்பிரபலம். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகம், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP..
News November 7, 2025
விஜயகாந்த் செய்த தவறை செய்ய மாட்டேன்: சீமான்

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை, தான் நிச்சயம் செய்ய மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த், கூட்டணி வைத்த பிறகே அது குறைந்ததாக அவர் கூறியுள்ளார். அரசியலில் மாற்று என்று கூறிவிட்டு அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றம் ஏற்படாது என்றும், தனித்து நின்றே நாதக ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சீமான் பேசியுள்ளார்.


