News June 26, 2024
இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
ஈரோட்டில் இவர் போட்டியா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சென்னை திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


