News April 1, 2024
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
உதயநிதியால் 8 திமுக அமைச்சர்களுக்கு சிக்கலா?

தேர்தலில் இளைஞர்களை களமிறக்க துடிக்கும் உதயநிதியின் முடிவால் சிட்டிங் அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வயது அடிப்படையில் 5 அமைச்சர்களுக்கும், கட்சியில் நிலவும் உள்ளடி மோதல்களால் மூவருக்கும் சீட் மறுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தாலும் காரியம் ஆகவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். அந்த 8 பேர் யாராக இருக்கும்?
News December 28, 2025
சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: அன்புமணி

தமிழகத்தில் என்ன நடக்கிறது என CM ஸ்டாலினுக்கே தெரியவில்லை என அன்புமணி சாடியுள்ளார். நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் தான் கனிமவளக் கொள்ளை அதிகமாக நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM மறுக்கிறார் எனவும், அதனால் திமுகவுக்கு சமூகநீதி பேசத் தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 28, 2025
அனைத்து கட்டடங்களுக்கும் ₹1,000.. TN அரசு நிர்ணயித்தது

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு ₹500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ₹1,000 ஆகும். மேலும், சொத்துவரி பெயர் மாற்றத்தின்போதே குடிநீர் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.


