News March 20, 2024
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
₹10,000 லஞ்சம் கொடுத்து வென்ற BJP: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தலில் காங்., தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிஹாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் GST பணத்தை பாஜக பிஹாரில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு, 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 17, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

2026-ல் திமுகவை வீழ்த்த தவெகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று நிர்மல்குமார் திட்டவட்டமாக கூறி, கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதனால் விஜய் தலைமையிலான கூட்டணியில் EPS-க்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


