News June 25, 2024
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 29, 2025
குமரியில் மணப்பெண் வாலிபரிடம் 12 லட்சம் மோசடி

புதுக் கடை அருகே காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து, தன்னிடம் ரூ.12 லட்சம் பணம், தங்க நகைகளை மோசடி செய்து விட்டதாக இளம்பெண் மீது வாலிபர் பரபரப்பு புகார் கூறி உள்ளார். ராமன்துறை பகுதியை சேர்ந்த வாலிபர். குழித்துறை ஜூடிசியல் மாஜிஸ் திரேட் கோர்ட் எண்.02 ல் ஒரு மனு தாக்கல் செய்தார்.நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தப் பெண் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 29, 2025
குமரியில் கூடுதல் நுழைவுக்கட்டண வசூல்

சுற்றுலாதலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தில் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் வசூல் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லை. மேலும் நபர் ஒருவருக்கு நுழைவுக்கட்டணம் ஜி.எஸ்.டி யுடன் சேர்த்து ரூ. 5 என அருவிக்கரை ஊராட்சி நிர்வாகம் நிர்ணயித்த நிலையில் ரூ. 5.90 என ஜி. எஸ்.டி. தொகையை கூடுதலாக சேர்த்து ரூ.6 என வசூல் செய்கிறார்கள். தொட்டிப் பாலத்தில் கட்டணம் குறித்த பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
News December 29, 2025
குமரி : இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

கன்னியாகுமரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 மார்ச் – 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


