News April 28, 2024
ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
நகம் வளரவே மாட்டேங்குதா? இதோ TIPS!

நகம் பார்ப்பதற்கு பளபளன்னு அழகாகவும், வலிமையாகவும் வளர நீங்கள் சில வழிகளை பின்பற்ற வேண்டும். ➤நகங்களை வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை கொண்டு மசாஜ் செய்யுங்கள் ➤தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ➤அவ்வப்போது நகங்களை வெட்டுங்கள் ➤நகத்தை கடிக்க வேண்டாம் ➤Polish Remover போன்ற ரசாயனங்களை பயன்படுத்தாதீங்க ➤நட்ஸ், சீட்ஸ், முட்டை போன்ற பயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். SHARE.
News February 5, 2026
‘என் சாவுக்கு இவர்களே காரணம்’

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ஆயிரம் ஆசைகளுடன் கணவன் வீட்டிற்குச் சென்ற பெண், உயிரை மாய்த்து கொண்டது பெரும் துயரம். அப்படியான சோக நிகழ்வு வேதாரண்யம் பகுதியை உலுக்கியுள்ளது. தனது மாமனார், மாமியார் செய்த கொடுமைகளால் மன உளைச்சலில் இருந்ததாக SM-ல் வீடியோ வெளியிட்ட காவ்யா(20), தனது 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாமியாரை கைது செய்துள்ள போலீஸ், மாமனாரை தேடி வருகிறது.
News February 5, 2026
எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறதா?

தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பலருக்கும் நாள் முழுவதும் உடல் சோர்வு இருக்கும். இதிலிருந்து விடுபட, சத்தான உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதற்கு தினசரி சேர்த்துக் கொள்ளக் கூடிய எளிய உணவுகளை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


