News March 22, 2025

இரவில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது.

Similar News

News March 22, 2025

சாதிப்பாரா ‘GOAT’ கோலி

image

18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் KKR-RCB மோதுகின்றன. இன்றையப் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் அடித்தால் அரிய சாதனை ஒன்றை படைப்பார். அதன்படி, 38 ரன்கள் எடுத்தால் KKRக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த வீரராவார். இதன்மூலம் IPL தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். முன்னதாக CSK, DC, PBKS அணிகளுக்கு எதிராக அவர் 1,000 ரன்கள் குவித்துள்ளார்.

News March 22, 2025

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க!

image

*ஆரஞ்சு தோலை பொடியாக்கி முகத்தில் தடவி வரலாம்.
*தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
*கற்றாழையில் உள்ள சில பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும்.
*எலுமிச்சை சாறு – வைட்டமின் சி அதிகம் உள்ளதால் முகப்பருக்களை தடுக்கும்.
*ஆமணக்கு எண்ணெய் – ரிசினோலிக் அமிலம் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.

News March 22, 2025

தேமுதிக கூட்டணி முடிவில் திடீர் மாற்றம்.. பின்னணி என்ன?

image

திமுக கூட்டணியில் சேர தேமுதிக காய் நகர்த்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் சமீப கால பேச்சுகளும் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா சீட்டு கேட்டு மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் அதிமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணமாம். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!