News April 11, 2025
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. நள்ளிரவில் சென்னை எண்ணூரில் 4 செ.மீ, திருவள்ளூர் செங்குன்றத்தில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
எனக்கு இதுதான் மிகப்பெரிய விருது: CM ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகள் ஆரத்தழுவியது தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய அவர், இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60 அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதியாக மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.
News December 3, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
News December 3, 2025
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.


