News February 26, 2025

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

காலை 10 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளை (பிப்.27) டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என MET கணித்திருந்த நிலையில், தற்போது இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயிலை இந்த மழை தணிக்குமா?

Similar News

News March 5, 2026

ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன்

image

Ex அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கிடைக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் வரலாம் என ஆஃபர் கொடுத்த அவர், தவெகவுக்கு சென்றுவிடுவேன் என திமுகவை மிரட்டி தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வாங்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஆஃபரை ஏற்பாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

News March 5, 2026

EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

image

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலைய விடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.

News March 5, 2026

ராஜ்யசபா வேட்பாளர் எல்.கே.சுதீஷ்: பிரேமலதா

image

தேதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதில் காங்., சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!