News April 17, 2025
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.
Similar News
News April 19, 2025
JEE முதல்நிலை 2-ம் கட்டத் தேர்வு முடிவு வெளியானது!

JEE 2-ம் கட்ட முதல்நிலை(மெயின்) தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) வெளியானது. IIT, NIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG பொறியியல் படிப்புகளில் சேர JEE முதல்நிலை, முதன்மை என 2 கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 – 9-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதன் முடிவுகள் <
News April 19, 2025
தொடரும் RCB-யின் சோகம்!

நடப்பு IPL தொடரில், இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி இருக்கும் RCB, அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தோல்வியடைந்த 3 மேட்சும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிதான். வெளி கிரவுண்டில் வெற்றி பெற்ற அணியால், பாவம்…. சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை!
News April 19, 2025
செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

மகாவிஷ்ணுவுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க. வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனநிம்மதி அடைந்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
‘ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’