News June 18, 2024
18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, மழை பெய்யும்போது வாகன ஓட்டிகள் சாலையில் பார்த்து செல்லவும்.
Similar News
News March 17, 2026
அழுத்தங்களால் கீழடியில் அகழ்வாராய்ச்சி: CM

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசை வெளியிட வைப்போம் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News March 17, 2026
BREAKING: விஜய் உடன் இணைய முடிவெடுத்தார்

புதுச்சேரி மாநில அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு, பாஜகவின் அழுத்தம் காரணமாக NDA கூட்டணியிலிருந்து <<19405426>>வெளியேற NR காங்கிரஸ் முடிவு<<>> செய்துள்ளதாக காலையில் செய்தி வெளியானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, NR காங்கிரஸுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜக தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 17, 2026
வாய்வழி செக்ஸ் மூலம் அதிகமாகும் தொண்டை கேன்சர்

தொண்டை புற்றுநோய் ஏற்பட வாய்வழி உறவில் (oral sex) ஈடுபடுவது முதன்மை காரணமாக மாறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு புகைப்பழக்கமே இதுவரை முதன்மை காரணமாக இருந்த நிலையில், US & UK-வில் நடந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் உறுதியாகியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அதிக நபர்களுடன் உடலுறவு கொள்வதாலும், HPV தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும் இவ்வகை புற்றுநோய் அதிகளவில் பரவுவதாக தெரிவித்துள்ளனர்.


