News April 12, 2025

16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News November 8, 2025

FLASH: 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக TN-ல் நவ. 8-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கெனவே IMD அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வெளியே செல்வோர் மறக்காமல் குடையோடு செல்லுங்கள்.

News November 8, 2025

ஒரே கட்சியாக மாறுகிறது.. அரசியல் திருப்பம்

image

வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக பிராந்திய அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைய உள்ளன. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களின் உரிமைக்காக முக்கிய தலைவர்களான கான்ராட் சங்கா, பிரத்யோத் மாணிக்யா, டேனியல் லாங்தசா, கிகோன் உள்ளிட்டோர் டெல்லியில் இதற்காக ஆலோசனை நடத்தினர். தென்னிந்தியாவிலும் இதுபோன்ற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

News November 8, 2025

இனி பட்டன்போனில் பணம் அனுப்பலாம்!

image

UPI-ல் பணம் அனுப்ப ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்பதில்லை. பட்டன்போனில் கூட UPI மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக 2022-ல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சேவை தான் ‘UPI 123 Pay’. இதில், மிஸ்டு கால் கொடுத்தால் வரும் அழைப்பில் பரிவர்த்தனை மதிப்பு, UPI pin-ஐ வழங்கினால் போதும். இந்த சேவையை சில வங்கிகள் செயல்படுத்தி வரும் நிலையில், IOB-யும் விரைவில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

error: Content is protected !!