News June 27, 2024
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
விரக்தியாக இருந்தால் இதை செய்யலாம்!

நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ உணரும்போது, அதை மற்றவர்கள் மீது காட்டாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பொருள்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பது ஆகியற்றை செய்வதன்மூலம் ரிலாக்ஸ் ஆகலாம். இது வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு உங்கள் கோபத்தை போக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News March 28, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 646 ▶குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். ▶பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
News March 28, 2026
₹2.38 லட்சம் கோடிக்கு ஆயுதம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC, ₹2.38 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போக்குவரத்து விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள், தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.


