News April 14, 2025

4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.

Similar News

News April 16, 2025

திலகபாமா, வடிவேல் ராவணன் சமரசம்

image

அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

News April 16, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 16, 2025

மே.வங்க கலவரத்தில் வங்கதேச குற்றவாளிகள்

image

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஊடுருவல்காரர்களை தடுக்க தவறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.

error: Content is protected !!