News April 4, 2025
10 மாவட்டங்களில் இரவில் மழைக்கு வாய்ப்பு

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லையில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News April 8, 2025
சென்னைக்கு 220 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ப்ரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி சதத்தால் அந்த அணி 219 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஷஷங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சென்னை அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
News April 8, 2025
அதெல்லாம் முடியாது.. டிரம்ப் விடாப்பிடி

கார் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இருதரப்பும் ஜீரோ வரி விதிக்கலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனையை டிரம்ப் நிராகரித்துள்ளார். 20% வரி உயர்த்தியது உயர்த்தியதுதான் எனவும், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து தாங்கள் அதிகம் இறக்குமதி செய்தாலும், USA பொருள்களை அந்நாடுகள் வாங்குவதில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வர்த்தகப் பற்றாக்குறையை போக்க, தங்களுடைய கச்சா எண்ணெய்யை வாங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.