News June 26, 2024
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்கள் (PHOTOS)

பொங்கலுக்குள் அதிமுகவிலிருந்து பல தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறிய நிலையில், அடுத்தடுத்து பலர் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சேலத்திலிருந்து <<18692753>>பல்பாக்கி கிருஷ்ணன்<<>>, கரூரிலிருந்து மரியமுல் ஆசியா, சென்னையிலிருந்து <<18746502>>JCD பிரபாகர்<<>> என அதிமுக EX MLA-க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர். இதனால், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிகட்டும் முயற்சியில் EPS களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News January 3, 2026
2 கண்களுக்கு மேல் உள்ள விலங்குகள்

உலகில் வாழும் உயிரினங்கள் நம்பமுடியாத அளவிற்குப் பன்முகத்தன்மை கொண்டவையாக உள்ளன. அந்த வகையில், சில விலங்குகளுக்கு 2-க்கும் மேற்பட்ட கண்கள் உள்ளன. ஊர்வன முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரை, பல கண்களைக் கொண்ட சில விலங்குகளின் போட்டோக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 3, 2026
புத்தரின் சின்னங்கள், இந்தியாவின் ஆன்மா: PM மோடி

1898-ல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை PM மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர் என்றும் கூறினார். புத்தரின் புனித சின்னங்கள் வெறும் தொல்பொருள் கலைப்பொருள்கள் அல்ல; இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புனிதம் மீண்டும் தாய் திருநாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


