News April 12, 2025
7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (ஏப்.12) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ( MET) கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
Similar News
News December 13, 2025
ரேஷன் கார்டு பெயர் மாற்றம்.. இன்று சிறப்பு முகாம்!

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களிலும் காலை 10 – பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும். ரேசன் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், இன்றைய சிறப்பு முகாம்களில் அங்கீகாரச் சான்று பெற்று கொள்ளலாம்.
News December 13, 2025
கோலியை முந்தினாலும் அலட்டிக் கொள்ளாத வைபவ்!

U19 ஆசியக்கோப்பையில் நேற்றைய UAE உடனான போட்டியில், இந்திய வீரர் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். இதையடுத்து, கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் பட்டியலில் அவரது பெயர் தடாலடியாக உயர்ந்து, கோலியையும் முந்தியது. இது தொடர்பாக பேசிய சூர்யவன்ஷி, இது போன்ற செய்திகள் சிரிப்பை வரவழைக்கிறது; இருப்பினும் இது எனது கிரிக்கெட்டை பாதிக்காது, கடந்து சென்றுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
டிசம்பர் 13: வரலாற்றில் இன்று

*1952 – நடிகை லட்சுமி பிறந்தநாள். 1963 – டிடிவி தினகரன் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே. 1990 – நடிகை ரெஜினா கஸான்ட்ரா பிறந்தநாள். *2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.


