News July 4, 2024
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
மூலிகை: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா..

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➣பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் ➣ஃபோலேட் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ➣பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது ➣பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை வராமல் தடுக்கும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 22, 2025
மீண்டும் இணைந்த டிரம்ப்- எலான் மஸ்க்

அமெரிக்க வரி மசோதா விவகாரத்தில் டிரம்ப் – எலான் மஸ்க் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. டிரம்ப்பை எதிர்த்து புதிய கட்சி தொடங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 3 மாதம் நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கொல்லப்பட்ட வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். இந்த போட்டோவை X தளத்தில் பகிர்ந்த மஸ்க், FOR CHARLIE என பதிவிட்டுள்ளார்.
News September 22, 2025
விஜய்க்கு தகுதியே இல்லை: KN நேரு

இபிஎஸ், விஜய்யை KN நேரு கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறிய நிலையில், திமுகவுடன் நேரடியாக மோத உனக்கு(விஜய்) தகுதியே இல்லை தம்பி என அவர் சாடியுள்ளார். மேலும், 4 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டு, தற்போது இபிஎஸ் வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்ட நேரு, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்றார்.