News November 12, 2024
கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW
Similar News
News November 19, 2024
ரேஷன் கடை ஊழியர் பணிக்கு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 152 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முக தேர்வு 25.11.2024 முதல் 05.12.2024 வரை நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். SHARE IT
News November 18, 2024
காட்டுமன்னார்கோயில் எஸ்.ஐ.யை கத்தியால் தாக்கியவர் கைது
காட்டுமன்னார்கோயில் எஸ்.ஐ. மணிகண்டன் மற்றும் போலீசார் இன்று காட்டுமன்னார்கோயில் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த வடக்கு கொளக்குடியை சேர்ந்த பக்கீர் மைதீன் (58) என்பவரை போலீஸர் பிடிக்க முயன்றபோது பக்கீர் மைதீன், எஸ்.ஐ. மணிகண்டனை அசிங்கமாக திட்டி கத்தியால் தாக்கினார். உடனே சக போலீசார் மடக்கி பிடித்து பக்கீர் மைதீனை கைது செய்தனர்.
News November 18, 2024
கடலூரில் 501 மனுக்கள் பெற்ற ஆட்சியர்
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.