News February 16, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அதிகபட்சமாக நியூசி. EX வீரர் மில்ஸ் 15 போட்டிகளில் 28 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதில் தலா 2 முறை 4 விக்கெட் கைப்பற்றியதும் அடங்கும். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக இலங்கை EX வீரர்கள் மலிங்கா 25 விக்கெட் (16 போட்டிகள்), முத்தையா முரளிதரன் 24 விக்கெட் (17 போட்டிகள்) கைப்பற்றியுள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 16 விக்கெட் சாய்த்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வாழனும், செமயா வாழனும்: மிருணாள் தாகூர்

தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதே தனி கெத்து தான். அப்படித்தான், தனது அம்மாவை காரில் ஏற்ற மறுத்த உறவுக்காரர்களுக்கு முன், பென்ஸ் கார் வாங்கி, அதில் அம்மாவை அமர வைத்து உலா வந்து கெத்து காட்டியுள்ளார் மிருணாள் தாகூர். உறவினர்கள் தனது அம்மாவை அவமானப்படுத்தியபோது ஏற்பட்ட வைராக்கியமே, தான் கார் வாங்கியதற்கான காரணம் என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.