News February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: வெளியேறியது பாகிஸ்தான்

CTஇல் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நியூசி.க்கு எதிரான போட்டியிலும் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மட்டுமே மீதியுள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வர முடியாது.
Similar News
News February 24, 2025
கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் 2 பேர் பலி

கேரளாவில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். வனப்பகுதியில் தம்பதியரான வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். யானை தாக்குல் தொடர்ந்து நடக்கும் நிலையில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 24, 2025
இன்றைய (பிப். 24) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 24 ▶மாசி – 12 ▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை: 01:30 AM – 03:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம் ▶நட்சத்திரம்: பூராடம் மா 5.04
News February 24, 2025
INDvsPAK போட்டியில் ஹர்திக்கின் காதலி?

நடாஷா உடனான விவாகரத்துக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யா, பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த போட்டியில் ஜாஸ்மின் கலந்து கொண்டது இந்த வதந்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அக்சர் படேலின் மனைவிக்கு அருகில் அமர்ந்து IND அணிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவு உண்மைதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.