News February 27, 2025
சாம்பியன்ஸ் டிராபி: PAK Vs BAN இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக போராடும்.
Similar News
News February 27, 2025
இதுதான் IND- PAK இடையேயான வித்தியாசம்: PAK கோச்

PAK வீரர்கள் போதிய அளவில் ODIகளில் விளையாடாததே CT தொடரில் இருந்து விரைவில் வெளியேற காரணம் என அந்த அணியின் தலைமை கோச் ஆகிப் ஜாவித் தெரிவித்துள்ளார். IND வீரர்கள் 1500 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், PAK வீரர்களோ 400க்கும் குறைவான போட்டிகளிலேயே விளையாடி உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஒரே மைதானத்தில் விளையாடுவதும் IND அணிக்கு சாதகமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 27, 2025
இந்தி முகமூடியில் ஒளிந்திருக்கும் சமஸ்கிருதம்: CM

முகமூடி தான் இந்தி, உண்மையில் ஒளிந்திருப்பது சமஸ்கிருதமே என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் மொழியே திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய். சமஸ்கிருதமும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் இந்தி உருவானது. மும்மொழி கொள்கையை ஏற்றால் சமஸ்கிருதமயமாக்கும் திட்டம் நிறைவேறிவிடும் என விளாசியுள்ள அவர், அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது என்றும் சூளுரைத்துள்ளார்.
News February 27, 2025
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் சுற்றுப்பகுதிகளிலும் இன்று (பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.