News November 23, 2024

சாம்பியன்ஸ் டிராபி; 26ஆம் தேதி கூடுகிறது ஐசிசி!

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பான குழப்பம் நிலவி வருவதால் வரும் 26ஆம் தேதி ICC அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் BCCI மற்றும் PCB அதிகாரிகள் பங்கேற்பார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை hybrid modeஇல் நடந்த வேண்டும் என BCCI கூறிய வருகிறது. ஆனால் அதை ஏற்க PCB மறுப்பதால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சமரசம் செய்ய ஐசிசி முயற்சித்து வருகிறது.

Similar News

News August 26, 2025

சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

image

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

News August 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.

News August 26, 2025

ராகுல் பெரும் பொய்யர்: தேவேந்திர பட்னாவிஸ்

image

வாக்கு திருடப்பட்டதாக ராகுல் காந்தி கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் பெரும் பொய்யைகள் பேசி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையான பொய்யர்கள் பாஜகவில்தான் இருப்பதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் திருட்டு அமைச்சர் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!