News February 25, 2025
சாம்பியன்ஸ் டிராஃபி.. டாஸ் போடுவதில் தாமதம்

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இன்று ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது. ராவல்பிண்டியில் போட்டி நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. விட்டுவிட்டு அங்கு மழை பெய்து வருவதால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதனிடையே, களத்தின் தன்மையை நடுவர்கள் சோதித்து வரும் நிலையில், போட்டி ஓவர்கள் குறைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 10, 2026
CINEMA 360°: ₹50 கோடி வசூலித்த ‘தாய் கிழவி’

*லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. * ‘தாய் கிழவி’ படம் வெளியாகி 10 நாள்களில் உலகளவில் ₹50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. *ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் 2-வது சிங்கிள் ‘துரு துரு’ நாளை மாலை வெளியாக உள்ளது. *பிரான்ஸில் சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
News March 10, 2026
ஈரான் புதிய உயர் தலைவர் மீது டிரம்ப் அதிருப்தி!

மறைந்த அயதுல்லா கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொஜ்தபா கமேனியை தேர்ந்தெடுத்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அடுத்த கமேனியை கொல்வதை விட, தான் ஈரானின் அடுத்த உயர் தலைவரை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
மார்ச் 10: வரலாற்றில் இன்று

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.


