News November 19, 2024
சாம்பியன்ஸ் டிராபி குறித்து விரைவில் முடிவு?
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என BCCI கூறிய நிலையில், இந்த விஷயத்தில் பாக்., கிரிக்கெட் வாரியம் மவுனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் ICC நேரடியாக களமிறங்கி பாக்., கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News November 19, 2024
கூட்டணியில் சேர ₹100 கோடி கேட்கும் கட்சிகள்: டி. சீனிவாசன்
அதிமுக கூட்டணியில் சேருவதற்கு 20 சீட் + ₹100 கோடியை கட்சிகள் கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேசி நிர்வாகிகள் கெடுத்துவிட வேண்டாம் எனவும், கூட்டணியை இபிஎஸ் பார்த்துக் கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாகவும், அதை முதலில் சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News November 19, 2024
கொளுத்தி போட்ட கவாஸ்கர்.. பண்ட் பதிலடி..!
DC-யில் இருந்து பண்ட் வெளியேறியதற்கு சம்பளப் பிரச்னைதான் காரணம் என கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால், நிச்சயமாக பணத்திற்காக வெளியேறவில்லை என பண்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அணி நிர்வாகத்துடன் அவருக்கு இருக்கும் கருத்து வேறுபாடு உறுதியாகி உள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் கூறுகின்றனர். DC-யின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமித்ததில் பண்ட்-க்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.
News November 19, 2024
செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். காற்று மாசை குறைப்பதற்காக செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அனுமதி அளிக்காத பட்சத்தில் PM மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.