News February 15, 2025
சாம்பியன்ஸ் கோப்பை: அதிக முறை வென்ற 2 அணிகள்

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித் தாெடர், கராச்சியில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. 8 சீசன்கள் நிறைவடைந்துள்ள இப்போட்டித் தொடர்களில் அதிக முறை 2 அணிகள் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளன. 2006, 2009ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றுள்ளது. இந்தியா (இலங்கையுடன் சேர்ந்து) 2002ஆம் ஆண்டிலும், தனித்து 2013ஆம் ஆண்டிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
Similar News
News March 7, 2026
மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News March 7, 2026
3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.
News March 7, 2026
வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


