News August 15, 2024

கடன் பிரச்னைகளை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

image

சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். அதே போல தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.

Similar News

News December 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 559 ▶குறள்: இமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். ▶பொருள்: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

News December 24, 2025

இறுதி மூச்சு உள்ளவரை தளபதி வழிதான்: அஜிதா

image

மா.செ., பதவி வழங்காததால் அதிப்ருதியடைந்த அஜிதா, தவெக ஆபீஸ் முன்பு தர்ணா, விஜய் காரை மறித்தது என பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து, CTR நிர்மல்குமார், ராஜ்குமார் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து, தர்ணாவை கைவிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணிப்பேன் என தெரிவித்தார். தலைமை மீதும் தளபதி (விஜய்) மீதும் முழு நம்பிக்கை உள்ளது என்றும் அஜிதா கூறினார்.

News December 24, 2025

NZ tour of IND: நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசி., அணி 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இதற்கான அணியை நியூசி., அறிவித்துள்ளது. ODI போட்டிகளை பிரேஸ்வெல் தலைமையிலும், T20-ஐ சாண்ட்னர் கேப்டன்சியிலும் விளையாடவுள்ளது. இரு அணியிலும் கேன் வில்லியம்சன் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. சூர்யகுமார் தலைமையில் T20 போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

error: Content is protected !!